காஷ்மீர் எல்லையருகே இன்று பாகிஸ்தான் ஊடுருவல் முறியடிப்பு-3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முசாபராபாத் மாவட்டத்தில் நீலம் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கேரான் வழியாக இன்று அதிகாலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லை வழியாக காஷ்மீரில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரும் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். என்றாலும் அவ்வப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயற்சித்து வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்து வருகிறார்கள்.
தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமும் உதவி வருவதால் சில சமயம் பாகிஸ்தான் ராணுவத்துடனும் இந்திய வீரர்கள் மோதலில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், இங்குள்ள முசாபராபாத் மாவட்டத்தில் நீலம் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கேரான் வழியாக இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
உடனடியாக இந்திய பாதுகாப்பு படையினர் உஷாராகி, அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் தப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இதில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள். தக்க சமயத்தில் இந்த ஊடுருவலை கண்டுபிடித்ததால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது அந்தப் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply