ஆறு நாடுகள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்
ரஷ்யா மற்றும் 5 மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணத்தின் கடைசி கட்டத்தை தஜிகிஸ்தானில் நிறைவு செய்துவிட்டு, அந்நாட்டின் தலைநகர் டஷ்பேனில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக புது டெல்லிக்கு புறப்பட்டார். ரஷ்யா மற்றும் 5 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 6-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். ரஷ்யாவில் அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் கலந்துகொண்டார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை சந்தித்து எல்லைப் பிரச்னை தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு, கடைசிகட்ட பயணமாக தஜிகிஸ்தான் தலைநகர் டஷ்பேன் வந்தடைந்தார். தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரகுமானை சந்தித்து பேசியதுடன், இருநாட்டு தூது குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டஷ்பேனில் 6 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு இன்று இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 16-ம் தேதி அவரது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார். 17-ம் தேதி காஷ்மீர் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் வாரணாசி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கன மழை காரணமாக, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply