சொந்த நாட்டு உளவுவிமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது குற்றம் சாட்டியது அம்பலம்
இந்திய உளவுவிமானத்தை சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான், தனது சொந்தநாட்டு உளவுவிமானத்தையே சுட்டு வீழ்த்தியது தெரியவந்து உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே பறந்தபடி படம் பிடித்த இந்தியாவின் சிறிய ரக ஆளில்லா உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டின் உளவு பிரிவு தெரிவித்தது. ஆனால் இதை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இருப்பினும் இந்திய உளவு விமானத்தை சுட்டதாக குற்றம் சாட்டிவரும் பாகிஸ்தான் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிஉள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான், தனது சொந்த நாட்டு உளவுவிமானத்தையே சுட்டு வீழ்த்தியது தெரியவந்துஉள்ளது.
விமானமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசாரால் பயன்படுத்தப்பட்டது என்றும், விமானம் சீனாவில் இருந்து வாங்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானமானது சீனாவால் தயாரிக்கப்பட்டது என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதுபோன்ற விமானங்களை இந்தியா சீனாவிடம் இருந்து வாங்கியது கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரைவில் இந்தியா தூதர் வாயிலாக பதில்அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply