ஜெர்மனியில் பெண்ணை தொந்தரவு செய்ததாக அணிலை கைது செய்த போலீசார்

ஜெர்மனியின் வடக்கு  ரெயின் வாஸ்பாலியா பகுதியின் பாட்ராபை சேர்ந்த ஒரு பெண் போலீசின் அவசர பிரிவுக்கு  ஒரு வினோத புகார் தெரிவித்தார்.மேற்கு ஜெர்மன் நகரில் தெருவின் வழியாக செல்லும் போது,  தன்னை அணில் ஒன்று விரட்டியடிப்பதாக அவர தெரிவித்தார்.தனக்கு உடனடியாக வந்து உதவுமாறு கூறினார்.உடனடியாக வந்த போலீசார் அந்த அணிலை பிடித்தனர். அந்த அணிலுக்கு சோர்வு நோய் தாக்கி  இருப்பதாக கண்டறிந்தனர்.

போலீசார் அந்த அணிலை கைது செய்து காவலில் எடுத்திருப்பதாக தங்களது பத்திரிகை செய்தியில் தெரிவித்து உள்ளனர்.  போலீஸ் நிலைய அதிகாரி  சிறு அணிலுக்கு உணவு வழங்குபவது போன்ற ஒரு புகைபடத்தை தங்களது பேஸ்புக் பக்கத்தில், வெளியிட்டு  உள்ளனர்.

இது போல வினோத  வழக்கு பதிவாவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்கவின் மெக்சிகன் மாநிலத்தில் 28,000 பவுண்டு  பருப்பு கொட்டைகள்  காணவில்லை என புகார் கூறபட்டு இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply