அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸ்திரேலியா மீது விமர்சனம்
தங்களிடம் அகதித்தஞ்சம்கோரி வந்தவர்களை பப்புவா நியுகினியில் குடியேற்றும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, தஞ்சக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்தும் விதத்தை ‘பெருந்துன்பம்’ என்று வர்ணித்துள்ளது.
2013-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கையின்படி, ஆஸ்திரேலியா பப்புவா நியுகினிக்கு சுமார் 400 மில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்கிறது.
பதிலுக்கு பப்புவா நியுகினி ஆஸ்திரேலியா சார்பில் தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்து, அங்கேயே குடியமர்த்த வேண்டும்.
இந்தக் கொள்கையை ஆஸ்திரேலியா நியாயப்படுத்தியே வந்துள்ளது.
ஆனால், வெற்றிகரமாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை விட, தடுப்பு முகாமில் உயிரிழந்தவர்களே அதிகம் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply