கேள்வி கேட்ட நிருபரை நான்சென்ஸ் எனத் திட்டிய அதிபர் ஒபாமா

வாஷிங்டனில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கேள்வி கேட்ட நிருபருக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நான்சென்ஸ் என்று அவரை திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்திய நீங்கள், ஈரான் சிறையில் வாடும் 4 அமெரிக்கர்களை மீட்க பேச்சு நடத்தாதது ஏன் என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஒபாமா, ஈரானுடனான எனது பேச்சுவார்த்தையும், சிறையில் வாடும் அமெரிக்கர்களின் பிரச்னையும் இடம்பெற்றிருந்தது. நான்சென்ஸ், எதையும் தெரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்க வேண்டாம் என்று காட்டமாக பதில் அளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply