ஐ.ம.சு.மு தலைவர்கள் தேர்தல் ஆணையாளருடன் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் கட்சி யின் தலைவர்கள் மற்றும் அக்கட்சி யின் பிரதிநிதிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவைச் சந்தித்தி ருந்தனர். ஐ.ம.சு. முவின் தலைவர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் தாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு எடுத்துக் கூறியதாக சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.முவின் செயலாளர் நாயகம் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் தினத்தில் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்த டளஸ் அலகப்பெருமவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தோம்.

அது மட்டுமன்றி ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் சிலரை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், இதனால் வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியும் எடுத்துக் கூறியதாக சுசில் பிரேமஜயந்த குறிப் பிட்டார்.

அரச ஊடகங்கள் மற்றும் அரச வளங்கள் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றமை மற்றும் தேர்தல் விதிகளை மீறும் வகையில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நியமனங்கள் வழங்குவது பற்றியும் எடுத்துக் கூறியிருந்தோம். தாம் முன்வைத்த காரணங்கள் தொடர் பில் கவனம் செலுத்துவதாக தேர்தல் கள் ஆணையாளர் தமக்கு உறுதிமொழி வழங்கியதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply