ஜனாதிபதி, சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் தகுதி பிரதமர் ரணிலுக்கே உண்டு :அமைச்சர் கயந்த கருணாதிலக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்து செயற்படுவதற்கும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதம ருக்கான அந்தஸ்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே யிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றுத் தெரிவித்தார். ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்ற அரசியல் அனுபவமு டைய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்கவை ஆகஸ்ட் 17 ஆம் திகதி அறுதிப்பெரும்பான்மை யுடன் பாராளுமன்றத்தில் மீண்டும் பிரதமர் ஆக்குவதன் மூலமே ஜனவரி 08 ஆம் திகதி வென்றெடுத்த நல்லாட்சிக்கான மக்கள் ஆணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அமைச்சர் கூறினார்.ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சி அமைக்குமென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் இது இயலாதென்பதும் உறுதியாகியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி வென்றெடுத்த மக்கள் ஆணை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நல்லாட்சி அரசாங்கமொன்று அவசியமெனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் கைகோர்த்து செயற்படக் கூடியவர் யார் என்பதை மக்கள், ஜனாதிபதியின் உரையிருந்தே புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஜனவரி 08 ஆம் திகதி கிடைத்த வெற்றி எக்காரணம் கொண்டும் பறிபோய் விடக்கூடாது என்பதே ஜனாதிபதியின் குறிக்கோளாகும். மக்களும் இதில் தெளிவாக உள்ளனர். இந்த வெற்றியில் எவராலும் குறுக்கிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்ட மஹிந்த சிந்தனையை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப் பார்க்கிறார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த போதே இவர் ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற பிற கட்சிகளை வீழ்த்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இன்று இவரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. தேர்தலுக்கு சரி யாக முகம் கொடுக்கக்கூடிய விதத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் கட்சி உள்ளாகியுள்ளது.

பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தெரிவானால் மாத்திரமே நல்லாட்சிக்கான பயணத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும். நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் ஒரு சுப நேரத்தில் வெளியிடுவோம்.

பாராளுமன்றத்தில் நாம் பெரும்பான்மை அமைப்பது உறுதியாகும். எனவே மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply