அமெரிக்காவில் ராணுவ அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் ராணுவ அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள சாத்தநூகாவில் உள்ள ராணுவ அலுவலகம் மற்றும் கடற்படை மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மர்மநபர் முதலில் அப்பகுதியில் உள்ள ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமிலும், இரண்டாவது கடற்படை மையம் மீதும் தாக்குதல் நடத்திஉள்ளார். ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் மையத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்படை மையத்திற்கு சென்று மர்மநபர் நடத்திய சரமாரியான துப்பாக்கி சூட்டில் 4 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடனடியாக மர்மநபரை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் மத்தியகிழக்கு நாடுகளில் பிறந்தவர் என்றும், அவருடைய பெயர் முகமது யூசுப் (வயது 24) என்று அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ராணுவம் பெரிதும் எச்சரிக்கையுடன் இருந்தநிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக வலைப்பதிவில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முகமது யூசுப் குவைத்தை சேர்ந்தவர் என்றும் சமீபத்தில் மத்திய கிழக்கு நாட்டிற்கு அடிக்கடி சென்றுவந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முமகது யூசுப் எஞ்ஜினியரிங் முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டை அடுத்து அமெரிக்க புலனாய்வு பிரிவினர் முகமது யூசுப்பின் உறவினர்கள் இரண்டு பெண்களை கைதுசெய்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கடற்படை வீரர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply