ஈராக்கில் தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்ததில் 80 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய கார்வெடி குண்டு தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகரில் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதி கார்வெடி குண்டு தாக்குதலை நடத்திஉள்ளான். ரம்ஜான் பண்டிகை நாளில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. தற்கொலை படை நடத்திய கார்வெடி குண்டு தாக்குதலில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரதுநிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்க்கெட் பகுதியில் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காராணம் தெரியவரவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுஉள்ளது. கார்வெடி குண்டு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று ஐ.எஸ். தீவிரவாதம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆனால் பொறுப்பு ஏற்று தகவல் வெளியிட்டு உள்ள டுவிட்டர் கணக்கானது ஐ.எஸ். தீவிரவாதிகள் உடையது தானா என்பது உடனடியாக சோதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈராக்கில் ரமலான் மாதம் தொடங்கியதுமே, பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தவருடம் டியாலா மாகாணத்தின் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் போராடி சிலபகுதிகளை தங்கள்வசம் கொண்டு வந்தனர். முழுபகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு போராடிவருகின்றனர். இருதர்பபு இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply