பிரதமராகி புதிய வாழ்வை தொடங்க விரும்புகிறேன்

இலங்கையின் பிரதமராகி புதிய வாழ்வை தொடங்க விரும்புவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார். இலங்கையில், வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராஜபட்ச போட்டியிட உள்ளார்.இந்நிலையில், இத்தேர்தலுக்கான பிரசாரத்தை இலங்கையின் வட மத்திய நகரான அனுராதபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து ராஜபட்ச பேசியதாவது:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், வெளிநாட்டு அமைப்புகளும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னை போட்டியிடவிடமால் தடுக்க முயன்றன. எனினும், அந்தச் சதியை மக்கள் தோற்கடித்தனர்.
நாங்கள் வெற்றி பெற்றால் நாட்டில் நிலவும் வேற்றுமைகளை அகற்றி மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம் என்றார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply