கிரீஸுக்கு கடன் வழங்கும் திட்டம்: ஜெர்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸுக்குக் கடனுதவி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்களை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள அந்தக் கடன் திட்டத்துக்கு கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸின் சொந்தக் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்பு உள்ளதைப் போல, கிரீஸுக்குக் கடன் வழங்க ஏஞ்சலா மெர்கலின் கட்சியினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான தீர்மானம் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 439 எம்.பி.க்களும், தீர்மானத்தை எதிர்த்து 119 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 40 எம்.பி.க்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்கு 8,600 கோடி யூரோக்கள் (சுமார் ரூ.5,88,222 கோடி) கடன் வழங்க, யூரோ கூட்டமைப்பு முன்வந்தது. கடனை வழங்குவதற்காக, கடுமையா பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கிரீஸுக்கு அந்தக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply