தமிழகத்தில் 2016-ல் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: நடிகை குஷ்பு பேச்சு

தமிழகத்தில் 2016-ல் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என நடிகை குஷ்பு தெரிவித்தார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.ஆர்.சிவராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு காமராஜர் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜர் 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பல சாதனைகளை படைத்தார். 9 அணைகளை கட்டினார். இதனால் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் வந்தன. பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

ஒரு ஆண்டில் 3,200 பள்ளிகளை திறந்தார். இன்றைக்கு ஆண்டுக்கு 6,830 டாஸ்மாக் கடைகளை திறந்து சாதனை படைத்து உள்ளனர்.

ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குடித்து விட்டு விபத்தில் சிக்கி இறக்கிறார்களே? அதற்கு யார் பொறுப்பு? இலவசங்களுக்காக ஓட்டு போடாதீர்கள்.

சென்னையில் மெட்ரோ ரெயிலை யார் கொண்டு வந்தார்கள்? என அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சண்டைபோட்டு வருகிறார்கள்.

இடையில் பா.ஜனதா தலைவர் தமிழிசையும் நாங்கள் தான் காரணம் என்கிறார்.

இது, சினிமாவில் வரும் காமெடி காட்சி போல் உள்ளது. அதாவது ஓட்டலில் சாப்பிட்டு விட்டு 50 ரூபாய் கொடுத்தவர், கல்லாவில்

இருப்பவரிடம் நான் 100 ரூபாய் கொடுத்தேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார். அப்போது சாப்பிட்டு விட்டு வந்த

மற்றொருவர் பணமே கொடுக்காமல், உங்கள் சண்டையில் நான் கொடுத்த 500 ரூபாயை மறந்து விடாதீர்கள் என்பார். அது போல உள்ளது.

தமிழகத்தில் 2016-ல் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 2016-ல் காங்கிரஸ் கட்சி பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை நிச்சயம் அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் நாசேராமச்சந்திரன், மாநில பார்வையாளர் சக்கரபாணி, முன்னாள் மாவட்ட தலைவர்

எஸ்.டி.நெடுஞ்செழியன் மற்றும் மு.அக்பர், பன்னீர்செல்வம், செந்தில்குமார், ஷீலா பிரபாகரன், விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply