என்.சி.இ.ஆர்.டி. பாடபுத்தகத்தில் முஷரப் பெரிய மனிதராக சித்தரிப்பு வக்கீல்கள் சங்கம் போர்க்கொடி

மத்திய பிரதேச மாநிலத்தில், 3–ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகம் ஒன்றில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா உள்ளிட்டவர்களின் படங்களை ‘இந்த பெரிய மனிதர்களை அடையாளம் காணுங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த பாட புத்தகத்தை பங்கஜ் ஜெயின் என்பவர் எழுதி, டெல்லி காயத்ரி பதிப்பகம் வெளியிட்டு, அதை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அங்கீகரித்துள்ளது.

முஷரப்பை பெரிய மனிதராக சித்தரித்து, பட்டியலில் சேர்த்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜபல்பூர் மாவட்ட வக்கீல் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து, அந்த குறிப்பிட்ட அத்தியாயத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும், புத்தக ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply