புறக்கோட்டையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வாசி
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்த பயணப் பொதியொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 34 வயதுடைய யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பெண் தொடர்பான விபரங்கள் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டதையடுத்து மேற்படி பெண் தொடர்பான தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.
7 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்துள்ள இவர் புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் வேறு நபரொருவருடன் தங்கியுள்ளதாகவும் அறிய வருகிறது. இது தொடர்பாக விடுதி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அவருடன் இருந்த கள்ளக் காதலன் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply