ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்வதே அரசாங்கத்தின் நோக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அதிகாரம் கோரினாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அன்று மலைநாட்டு சிங்களவர்கள் சமஷ்டி கோரிய போது தமிழ் மக்கள் அதை எதிர்த்ததாக குறிப்பிட்ட அவர் இன்று தமிழ் மக்கள் சமஷ்டி கோருகையில் சிங்கள மக்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.
தமிழ் கட்சிகள் 1950களில் சமஷ்டி அதிகாரம் கோரியதாகவும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவே முதலில் சமஷ்டி பற்றி பேசியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் த.தே.கூ.யின் விஞ்ஞாபனம் குறித்து வின வியதற்கு பதிலளித்த அவர்,
ஐக்கிய இலங்கைக்குள்ளே அதிகாரத்தை பகிர்வதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். எமது நிலைப்பாடு த.தே. இன் நிலைப்பாட்டை விடமாற்றமானது.
த.தே.கூ. சமஷ்டி அதிகாரம் கோரியுள்ளது. எவரும் குறைவாக அதிகாரம் கோருவ தில்லை.
அதிக அதிகாரம் கோரினாலே தாம் எதிர்பார்ப்பது கிடைக்கும் அவர்களுக்கு எதுவும் கோர முடியும் தமிழ் கட்சிகள் 1950 கள் முதல் சமஷ்டி அதிகாரமே கோரி வந்தன. சமஷ்டி கட்சியொன்றையே அன்று தமிழ் கட்சிகள் அடையாளப்படுத்தி இலங்கையின் சமஷ்டி அதிகாரம் குறித்து எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கவே முதலில் பேசினார். எமது நாட்டை முன்னேற்றுவதற்கு சமஷ்டி முறை சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.
டொனமூர் அரசியலமைப்பு காலம் முதல் சமஷ்டி கோரிக்கை முன்வைக் கப்பட்டது.
சமஷ்டிக்கு பயமில்லாததால் அன்று மலைநாட்டு சிங்கள பெளத்தர்கள் சமஷ்டி கோரினர். ஆனால் தமிழ் மக்கள் அதனை எதிர்த்தார்கள். ஐக்கிய இலங்கைக்குள் வாழ வேண்டுமென்பது அவர்கள் கோரினார். தற்பொழுது தமிழ் மக்கள் சமஷ்டி அதிகாரம் கோருகையில் சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர் என்றார்.
13 பிளஸ்
ஐ.ம.சு.மு. ஆட்சியில் 13 பிளஸ் குறித்து பேசப்பட்டாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பகிர்வு என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் 13 பிளஸ் (+) அல்லது மைனஸ் (-) குறித்து எதுவும் தெரியாமலே அன்று மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் குறித்து பேசினர்.
13 பிளஸ் பேசியவர் இன்று 13 ஆவது திருத்தத்தை விட அதிகாரத்தை குறைக்க தயாராகிறார். அன்று 13 பிளஸ் குறித்து பேசினாலும் 13ஐ விட குறைந்த அதிகாரம் வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அதனாலே 13 மைனஸ் வழங்கும் அரசில் இருக்கமாட்டேன் என பகிரங்கமாக கூறினேன். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண தெரிவுக்குழு அமைத்து 02 வாரத்தில் அறிக்கை கோரியிருந்த மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையை தாமதப்படுத்துமாறு தெரிவுக்குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கூறியிருந்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply