பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்: 43 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானை சேர்ந்த பழங்குடி இன தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானில் வடக்கு மற்றும் தெற்கு வாஜிரிஸ்தான் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் ராணுவம் கூறும் போது “வடக்கு மற்றும் தெற்கு வாஜிரிஸ்தான் பகுதிகளின் ஷவால் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தின. இதில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. மேலும் இத்தாக்குதலின் போது அங்கு பதுங்கியிருந்த 43 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்” என தெரிவித்துள்ளது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த 3000 தீவிரவாதிகளை இதுவரை கொன்றுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply