சீன ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து
கிழக்கு சீனாவின் ஷான்டங் மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீவண்டாய் கவுண்டியில் உள்ள ரங்சிங் என்ற நிறுனத்திற்குச் சொந்தமானான ரசாயன தொழிற்சாலையில் நேற்றிரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 8.50 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்கள் இருந்த கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டதால் பலத்த சத்ததுடன் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தொழிற்சாலை அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 12-ம் தேதி, இதேபோல் நடந்த ரசாயன விபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply