பிரதமர் ரணிலுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித் துள்ளன. இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் பிரதமராகப் பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டி ருக்கும் விதம் நாட்டு மக்களுக்குப் பெருமையானதொன்று எனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹமண்ட், புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வாழ்த்துச் செய்தியொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் இலங்கை தொடர்ந்தும் பயணிப்பதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியான பங்குதாரராக இருக்கும். ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து பணி யாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச் சர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராகத் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் அவர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு, முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவாகச் செயற்படும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் ஐ.தே.கவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியை பிரான்சும் பாராட்டியுள்ளது. இலங்கைக்கு தனது வாழ்த்துக்களையும் பிரான்ஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply