ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்யக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி அதிமுக தொண்டர் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி அவரது உருவபொம்மையை எரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை போத்தனூர் காந்திஜி ரோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மலிங்கம் (வயது 45) ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்யக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தினார்.அ.தி.மு.க. தொண்டரான இவர், சுந்தராபுரம்–மதுக்கரை சாலையில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள 60 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஏறினார். நீண்ட நேரம் ஆகியும் தர்மலிங்கத்தை காணாததால் நண்பர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவர், தான் செல்போன் கோபுரத்தின் மீது இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் பயந்து போன அவர்களது நண்பர்கள் அங்கு சென்று அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தினர்.ஆனால் கீழே இறங்க மறுத்த அவர் கோபுரத்தின் மீது நின்றபடியே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
அத்துடன் அவரை கைது செய்தால் தான் கீழே இறங்குவேன் என்றும், வேறு யாராவது மேலே ஏறி வர முயன்றால் கீழே குதித்து தற்கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசார் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு படையைச் சேர்ந்த 3 பேரும், தர்மலிங்கத்தின் நண்பர்கள் 3 பேரும் என 6 பேர் செல்போன் கோபுரத்தில் இருந்த ஏணி வழியாக ஏறிச்சென்று தர்மலிங்கத்தை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply