காடையர்களை கட்டுப்படுத்தாது பொலிஸார் பக்கச் சார்பு

காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் காத்தான்குடி பொலிசார் பக்க சார்பாக நடந்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார். காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் காயமடைந்தவர்க ளையும் பாதிக்கப்பட்டவர்களையும் சேதமடைந்த இடங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் சனிக்கிழமை இரவு (22) காத்தான்குடிக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே றவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த றவூப் ஹக்கீம், காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது பிரோகிக்கப்பட்ட காடைத்தனத்தை நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

இந்த கலவரத்தில் காத்தான்குடி பொலிசார் பக்க சார்பக நடந்துள்ளனர். இதனை பொலிஸ் மா அதிபருக்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் கூறியுள்ளேன். பக்கசார்பின்றி பொலிசார் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட நடந்துகொள்ள வேண்டும். அதனை செய்ய காத்தான்குடி பொலிசார் தவறியுள்ளனர்.

நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர் களுக்கு நல்லாட்சிக்கு குந்தகம் விளைவித்தவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது அந்தந்த கட்சிகளை பொறுத்தது.

இவ்வாறு நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவது நல்லாட்சியில் கவலைக்குரிய விடயமாகும்.

நல்லாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களுக்கு இவ்வாறான காடைத்தனம் பிரயோகிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சம்பவங்களில் காயமடைந்த வர்கள் விரைவில் குணமடைய இறை வனை பிராத்திப்பதுடன் இந்தச் சம்பவத்தினை வன்மையாக கண்டிப் பதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply