எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் கூட்டமைப்பு!
புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அந்தக் கட்சி கோரி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் உட்பட 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் உட்பட 95 ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் அடுத்தபடியாக அதிக ஆசனங்களை பெற்ற கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது.
இதன்காரணமாகவே புதிதாக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் பதவியினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply