எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு மாகாணசபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடமாகாண சபைத் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கரணவாய் தெற்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோர் தெரிவாகினர். அங்கஜன் இராமநாதனின் இடத்திற்கு ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்ரீ ரங்கேஸ்வரன் வடக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
புதிய வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் பதவியேற்கவுள்ளதாக வடமாகாணசபைத் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply