இலங்கை தொடர்பான பொய்ப்பிரசாரங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் – டோனி பிளேயர்
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித் தானிய முன்னாள் பிரதமர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளார். ஓகஸ்ட் 17ம் திகதி தேர்தலை மிக அமைதியாகவும் நியாய மானதாகவும் நடத்தியமை குறித்தும் பிளேயர் ஜனாதிப திக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையும் அவர் பாராட்டியுள்ளார்.
இதனை தவிர பிளேயர் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டங்களின் போது இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் பிளேயர், ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.இலங்கையின் சுற்றுலாத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் அதன் முன்னேற்றத்திற்கு வழங்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply