சிரியாவின் பெருமைமிக்க கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மே 21-ம் தேதி ‘பாலைவனத்தின் முத்து’ என்றழைக்கப்படும் சிரியாவின் பல்மைரா நகரைக் கைப்பற்றிய போதே, பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ள அந்த இடம் என்ன ஆகுமோ? என்று சர்வதேச தொல்லியல் துறையினரும் கலைப் பொருள் ஆர்வலர்களும் கவலை கொண்டனர்.
இந்நிலையில், அங்குள்ள பால் ஷாமின் என்ற ஆலயத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடுகுண்டு வைத்து தகர்த்து விட்டதாக அந்நாட்டு தொல்பொருட்கள் (antiquities) தலைவர் நேற்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் செல்லோ என்று அழைக்கப்படும் கோவிலின் உட்பகுதி வெகுவாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவில் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply