சம்பந்தன் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது : கருணாநிதி

karunaதமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

 

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற தேர்தலில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களைக் பெற்று, பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் வகித்தது. 

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முக்கியமான பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்த தேசிய அரசு அங்கே அமைக்க இரண்டு கட்சிகளுமே ஒப்புக் கொண்டன.

 

அதன் காரணமாக அங்கே இரண்டாவது பெரிய கட்சி, எதிர்க் கட்சியாக அங்கே அமரவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

38 ஆண்டுகளுக்கு முன்பு 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த நாவலர் அமிர்தலிங்கத்துக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

 

இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நம்பிக்கையைத் தருகிறது.

 

இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று இரா.சம்பந்தன் கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. சம்பந்தனுக்கு திமுக சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகள்´´ என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply