ஆப்கானிஸ்தானில் 13 பேரை வரிசையாக நிறுத்தி சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் பால்க் மாகாணத்தில் ‘ஹசாரா’ இன மக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். நேற்று அவர்கள் வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் 2 வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.அதில் பயணம் செய்த ஆண்களை கீழே இறக்கி வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் அவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இத்தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பு ஏற்கவில்லை. எனவே எந்த தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது என தெரியவில்லை.துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது அதிபர் அஷ்ரப்கனி காபூலில் சர்வதேச நன்கொடையாளர்கள் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதில் மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று இருந்தனர்.தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்புக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.பொதுவாக பால்க் மாகாணம் வன்முறையின்றி மிகவும் அமைதியாக இருந்து வந்தது. இங்கு கொடூர தாக்குதல் நடந்திருப்பது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply