இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் இவ்வருட இறுதியில்

therthalஉள்ளுராட்சி சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமைக்கு ஏற்ப இவ்வருட இறுதியில் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல் நான்கு கட்டங்களில் நடைபெற்றது. ஆனால், இம்முறை சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்றல் மாதம் தெரிவித்திருந்தார்.

புதிய எல்லை நிர்ணயத்தின் பின்னர் நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், புதிய அமைச்சர்களின் பதவியேற்பின் பின்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply