செனேகல் நாட்டில் 7 பேருடன் சென்ற விமானம் திடீர் மாயம்?

airசெனேகல் நாட்டில் புர்கினாவில் இருந்து தாகர் நகருக்கு ஒரு ஆம்புலன்ஸ் விமானம் இரவில் புறப்பட்டு சென்றது. அதில் ஒரு நோயாளியும் அவருக்கு உதவியாக ஒரு டாக்டர், 2 நர்சுகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் தாகர் கடல் பகுதியில் பறந்த போது திடீரென மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டானது. அதை தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அவற்றை தேடும் பணியில் 3 விமானங்கள், ஒரு கடற்படை கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply