சர்வதேச விசாரணையை வலியுறுத்தி சிவாஜிலிங்கம் நடைபயணம்
சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 10 ஆம் திகதி கிளிநொச்சி முதல் நல்லூர் வரை நடை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் இருந்து யாழ். நல்லூர் வரை நடை பயணம் மேற்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் இனத்திற்கான தன்மானப் பிரச்சினை என்ற காரணத்தினால் இந்தப் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளராக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடைபயணத்தில்
அனைத்து மக்களையும் பங்கு கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில், ஈழத் தமிழர்கள் நீதி கேட்டு நிற்கின்றார்கள் என்ற செய்தி இலங்கை அரசுக்கு மட்டுமன்றி சர்வதேசத்திலும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் இதனை அவதானித்து புலம் பெயர் தமிழர்களும், தொப்புள் கொடி உறவான தாய்த் தமிழக மக்களும் வீறு கொண்டு எழ வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 07 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
ஏ௯ வீதி வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நல்லூர் ஆலயத்தில் நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். அரசியல் கட்சிகள் பேதமின்றி அந்த நடை பயணத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது தற்போது ஐ.நா. விசாரணையினை வலியுறுத்தி பெற்றுக்கொள்ளும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் தலைமையிலான குழுவினரை இணையுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நடைபயணம் 5 நாட்கள் மேற்கொள்ளப்படும். பொது மக்களின் ஆதரவினை பார்த்து இன்னும் ஓரிரு நாட்களுக்கு நடைபயணத்தினை நீடிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பி னர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களிடமும் குறித்த நடை பயணத்தில் கலந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் சிலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சிலர் யோசித்து முடிவுகள் சொல்வதாகவும் கூறியுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் குறித்த போராட்டங்களின் பின்னர் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையில் நீதி கிடைக்குமென்றும் அரசியல் தீர்வு கிடைக்குமென்றும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply