ஈராக்கில் 40-க்கும் மேற்பட்ட துருக்கி விமானங்கள் தாக்குதல்: குர்து இன போராளிகளை குறிவைத்து குண்டுமழை

ஈராக்கில் குர்து இன போராளிகளை குறிவைத்து, 40-க்கும் மேற்பட்ட துருக்கி விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த குண்டு மழையில் ஏராளமானோர் airபலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியிலும், ஈராக்கிலும் பி.கே.கே. என்ற பெயரில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி, போராளிகள் அமைப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள் குர்து இனத்தவர் ஆவார்கள். 1984-ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தி வருகிற இந்த அமைப்பினை துருக்கி, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவை தீவிரவாத அமைப்பாக கருதி தடை செய்துள்ளன. இந்த அமைப்பினர் இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

 

துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹக்காரியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை 2 தினங்களுக்கு முன் இந்த பி.கே.கே. போராளிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.

 

இந்த தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த தாக்குதலை தொடர்ந்து துருக்கி அதிரடியில் இறங்கியது.

 

ஈராக்கில் வடக்கு பகுதியில் பதுங்கியுள்ள பி.கே.கே. போராளிகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு துருக்கியின் 40-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமான போராளிகள் சிக்கி பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் எத்தனை போராளிகள் உயிரிழந்தனர் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

 

இந்த தாக்குதல் தொடர்பாக துருக்கி அரசு அதிகாரிகள் கூறும்போது, “பி.கே.கே. போராளிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் எப்௧6, எப்௪ ரக போர் விமானங்கள் பங்கேற்றன. நேற்று (நேற்று முன்தினம்) இரவு 10 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. இன்று (நேற்று) அதிகாலை 4 மணிக்கு தாக்குதல் முடிவுக்கு வந்தது. இதில் காண்டில், பாஸ்யன் அவாஷின், ஜாப் பகுதிகளில் உள்ள பி.கே.கே. போராளிகளின் நிலைகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என கூறினார்கள்.

 

இதற்கிடையே துருக்கியில், இக்திர் பகுதியில், திலுகு பார்டர் கேட் என்ற இடத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் பயணம் செய்த மினி பஸ்சை குறிவைத்து பி.கே.கே. போராளிகள் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடத்தினார்கள்.

 

இதில் சிக்கி 13 போலீஸ் அதிகாரிகள் உடல் சிதறி பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இது துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply