ஏமன் தாக்குதலில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

ஏமனில் துறைமுகம் ஒன்றில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான் வழித்தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. yemen_1ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக. அந்நாட்டு ராணுவத்தினருடன் இணைந்து சவுதி கூட்டுப் படையினர், கடந்த சில நாட்களாக தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஏமனில் உள்ள ஹொடெய்டா துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கொள்ளையர்களையும் ஹவுதி ளர்ச்சியாளர்களையும் குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியர்கள் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த தாக்குதலில் 2 படகுகளும் சேதமடைந்தன. இதனிடையே, மாரிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 12 சிதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று ஒரே நாளில், 20 மேற்பட்ட இடங்களில்  கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக  ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply