சிரியாவில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றிய கிளர்ச்சி படை
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷர்அல் ஆசாத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபருக்கு எதிராக போரிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.கிளர்ச்சி படை ஒன்று தனியாக போரிட்டு வருகிறது. இந்த படைகளுக்கும், அதிபரின் படைகளுக்கும் இடையே இத்திலிப் என்ற இடத்தில் கடும் சண்டை நடந்தது.இங்கு ராணுவ விமான நிலையம் ஒன்று உள்ளது. அதை கைப்பற்றுவதற்காக கிளர்ச்சி படையினர் முன்னேறி வந்தனர். அவர்களை அரசு படைகளால் தடுக்க முடியவில்லை. இறுதியில் கிளர்ச்சி படையினரிடம் விமான நிலையம் வீழ்ந்தது.
இந்த போரின்போது ராணுவ தரப்பில் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ராணுவ விமான நிலையம் கிளர்ச்சி படையினரிடம் சென்று இருப்பதால் ராணுவத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply