பீஜி வீரவன்சவின் விசாரணைகள் நிறைவு
சட்டவிரோதமாக போலி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஷி, போலி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை அறிவித்ததுடன், சஷி வீரவன்ச குறித்த விசாரணை அறிக்கையை நீதிபதியிடம் கையளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் நீதிபதியின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கு மாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் கேட்டுக் கொண்டதற்கமைய, வழக்கு விசாரணை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட் டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply