நாட்டை அழி;ப்பதற்கு இடமளிக்க முடியாது : சம்பந்தன்
ஜனநாயகம் நிலைத் திருக்கா விட்டால் நாடு அழிந்துவிடும். நாட்டை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க யாரும் தயாராக வில்லை. எனவே அனைவரும் இணைந்து ஜனநாயகத்தை உறுதிப்படுத் துவது அவசியமானது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் திணைக்களத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் மக்களே இறைமை உள்ளவர்கள். அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை உறுதிப் படுத்துவது தேர்தல்கள் திணைக்களத்தின் கடமையாகும்.
கடந்த காலங்களில் தேர்தல் திணைக்களம் தனது கடமையை செய்வதற்கு சில தரப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர். இருந்தபோதும் கடைசியாக நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல்கள் திணைக்களம் சுயாதீனமாகச் செயற்பட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது.
மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. அவை நடைமுறைப் படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply