தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும்
இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தமது அதிருப்தியை அவர்கள் வெளியிட்டிருந்தனர். வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படாத விடயத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, பரிந்துரைகளை அமுல்படுத்துவது மற்றும் வடிவமைப்பது போன்ற விடயங்களில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் ஹ¥சைன் பொருத்தமான நேரத்தில் இலங்கைக்கு விஜயம்மேற் கொள்ளும்போது பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply