இங்கிலாந்து பிரதமர் கேமரூன், முன்கூட்டியே பதவி விலகலா?

Cameron இங்கிலாந்து நாட்டில் டேவிட் கேமரூன் கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றார். இந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார். அவரது பதவி காலம் 2020-ம் ஆண்டு முடிகிறது. ஆனால் மூன்றாவது முறையாக தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்து விட்டார். தனக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு உள்துறை மந்திரி தெரசா மே, லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ஜார்ஜ் ஆஸ்பர்ன் ஆகியோர் தகுதியானவர்கள் என கூறி இருந்தார்.

 

இந்த நிலையில் அவர் பதவி காலம் முடிவதற்கு ஓராண்டு முன்பாகவே (2019-ல்) பதவி விலகி விடுவார் என ஊடகத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல் இப்போது இங்கிலாந்து அரசு வட்டாரத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தபோது, “பிரதமர் தெளிவாக உள்ளார். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்திற்கும் பதவியில் தொடருவார்” என கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply