அமெரிக்க கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் துடிதுடித்து பலி
அமெரிக்காவின் ஓரியான் மாநிலத்தில் உள்ள உம்பக்வா சமூகக் கல்லூரியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியிருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் குறித்து மேலதிக விவரங்கள் வெளிவராத நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply