பாகிஸ்தானில் கொடூரம் வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை

sappattiபாகிஸ்தானின் லாகூரில் உள்ள அஷிம்பார்க் பகுதியை சேர்ந்தவள் அனீகா (13). சப்பாத்தி சுடும் படி இவளிடம் தந்தை கூறினார். ஆனால் சிறுமியான இவளால் அழகாக வட்ட வடிவில் சப்பாத்தி சுட இயலவில்லை. தாறுமாறாக சுட்டு வைத்தாள். இதைப் பார்த்த அவளது தந்தையும், அண்ணனும் ஆத்திரம் அடைந்தனர். அனிகாவை அடித்து உதைத்தனர்.

வலி தாங்காமல் சிறுமி அனீகா அலறி துடித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் கண் மூடித்தனமாக அடித்து துன்புறுத்தினர். இதனால் அவள் மயக்கம் அடைந்தாள்.

உடனே அவளை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அனீகா இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையையும், அவளது அண்ணனையும் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் இது போன்ற பல கொலைகள் நடைபெறுவதாகவும், அதை போலீசுக்கு தெரியாமல் மறைத்து பிணத்தை புதைத்து விடுவதாகவும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply