மின்சாரக் கதிரையும் இல்லை, ஹைபிரிட் நீதிமன்றமும் இல்லை! : மைத்திரி
யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, நேற்று மாலை – ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“எம்மீது சர்வதேசம் கொண்டிருந்த கொடுங்கோபத்தினை எமது இராஜதந்திர நகர்வுகளினூடாக தணியவைத்திருக்கிறோம். இது எமது நல்லாட்சிக்கான அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி. கடந்த காலத்தில் அரசாட்சியாளராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலகுவாக சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டார்.
இவ்வாறான நிலைமைகளினால்தான் சர்வதேசத்தின் கடும்போக்கு, எமது நாட்டினை வாட்டி வதைத்தது. ஆனால், எமது அரசாங்கம் சரியான முறையில் சர்வதேசத்தை அணுகி, அவர்களின் கோபத்தினைத் தணித்திருக்கிறோம். இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
இந்த வெற்றியினைச் சகிக்க முடியாதவர்கள் தேவையற்ற விதத்தில் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆகையினால், அவர்களுக்கும் எமது நியாயத்தினைத் தெளிவுபடுத்தவேண்டும். எனவே, வெகுவிரைவில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் வழங்கக் காத்திருக்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply