யாழ்.மாவட்டத்தில் 9 ஆயிரத்து 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது யாழ் அரசாங்க அதிபர் : நாகலிங்கம் வேதநாயகம்

vellakkadu_003யாழ்.மாவட்டத்தில் 9 ஆயிரத்து 51 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலநிலையின்; பிரகாரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ். பிரதேச செயலக பிரிவில் 1835 குடும்பங்களைச் சேர்ந்த 6954 அங்கத்தவர்களும், வேலணை 556 குடும்பங்களைச் சேர்ந்த 2178 அங்கத்தவர்களும், ஊர்காவற்துறை 217 குடும்பங்களைச் சேர்ந்த 783 அங்கத்தவர்களும், காரைநகர் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1341 அங்கத்தவர்களும், நல்லூர் 775 குடும்பங்களைச் சேர்ந்த 2885 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், கோப்பாய் 703 குடும்பங்களைச் சேர்ந்த 2714 அங்கத்தவர்களும், சங்கானை 687 குடும்பங்களைச் சேர்ந்த 3030 அங்கத்தவர்களும், சண்டிலிப்பாய் 577 குடும்பங்களைச் சேர்ந்த 2094 அங்கத்தவர்களும், உடுவில் 1155 குடும்பங்களை சேர்ந்த 4078 அங்கத்தவர்களும், தெல்லிப்பளை 442 குடுமு;பங்களைச் சேர்ந்த 1532 அங்கத்தவர்களும், சாவகச்சேரி 1254 குடும்பங்களைச் சேர்ந்த 4759 அங்கத்தவர்களும், கரவெட்டி 56 குடும்பங்களைச் சேர்;ந்த 233 அங்கத்தவர்களும், மருதங்கேணி 155 குடும்பங்களைச் சேர்ந்த 600 அங்கத்தவர்களும், பருத்தித்துறை 238 குடும்பங்களைச் சேர்ந்த 935 அங்கத்தவர்களுமாக 34 ஆயிரத்து 116 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கவிடப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றதுடன், தரப்பால் மற்றும் நிலவிரிப்புக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் தகவல்கள் திரட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply