அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் சிறைகளில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டாலும் அரசாங்கமே அதனை பொறுப்பேற்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவ்வாறான நிலை ஏற்படின் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு அரசாங்கத்தின் மீது பாரிய அதிருப்தி ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து தௌிவான பதில் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை எனவும் வடக்கு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply