ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: ஆஸ்திரியா போலீஸ் எச்சரிக்கை

isisபுத்தாண்டுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளது என்று ஆஸ்திரியா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.அகதிகள் போர்வையில் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பாரிசில் தாக்குதல் நடத்தினர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்புப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஆஸ்திரியா நட்புரீதியில் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், “புத்தாண்டுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு அல்லது வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply