ஜனாதிபதி செயலகத்தில் விரைவில் பாரிய மாற்றம்
ஜனாதிபதி செயலகத்தில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அதிகாரிகள் பலரை நீக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் செயலகத்தின் பிரபல முக்கிய அதிகாரிகள் சிலரும் மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அசாதாரணங்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply