6 பயங்கரவாதிகள் கைது எதிரொலி: சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் படாமில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். படாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் தாக்குதல் நடந்தால் மிகப்பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சிங்கப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை உறுதிசெய்த சிங்கப்பூர் உள்துறை மந்திரி கே.சண்முகம், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மரினா வளைகுடாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என கூறினார். எங்கள் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் எவ்வாறு எல்லாம் திட்டமிட்டு வருகிறார்கள்? என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply