வடக்கு அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை
வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வடக்கு முதல்வர், வட மாகாணசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பில் அனுமதி கோரி பிரேரணை ஒன்றினை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை ஏற்கனவே கோரியிருந்த நிலையில் முதலமைச்சரினால் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அமர்வின்போது இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply