உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று காலை முதல் கைதிகள் உணவு உண்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அனுராதபுரம் சிறைச்சாலை மற்றும் கொழும்பு மகசீன் சிறைச்சாலைகளில் உள்ள 99 பேரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட காலமாக சிறையிலுள்ள தாம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply