நாமல் குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்

namalநிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது.றக்பி விளையாட்டு முன்னேற்றத்திற்காக எனக் கூறி, நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக, கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, நாமல் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜரானார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பில் மேலும் சிலரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

அத்துடன், மேலும் சிலரை இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியதாக, எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன, ஒக்டோபர் 31ம் திகதிக்கு முன்னர் இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply