தென்கொரியா–அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு இடையே வடகொரியா நீர்மூழ்கி ஏவுகணை சோதனையால் பதற்றம் உலக நாடுகள் கண்டனம்

NORTH KOREAதென்கொரியா, அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு இடையே வடகொரியா நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.அசைந்து கொடுக்காத வடகொரியா ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறுபக்கம் உலக நாடுகளின் எதிர்ப்பு என சவாலான சூழ்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மாறாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்துகிறது.3 முறை அணுக்குண்டுகளை வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் அணுக்குண்டை விட பல மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியுள்ளதாக அறிவித்து, உலக அரங்கை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை.நீர்மூழ்கி ஏவுகணை

 

இந்த நிலையில் தற்போது தென்கொரியாவில், தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இப்படி பயிற்சி நடைபெறுகிற நேரமெல்லாம், வடகொரியா ஆத்திரம் அடைந்து, எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.அந்த வகையில் நேற்று இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு சின்போ கடலோர நகரம் அருகே நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை (கே.என்–11) வடகொரியா நடத்தியது. அந்த ஏவுகணை 500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று, ஜப்பான் கடலில் விழுந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த ஏவுகணை சோதனை வெற்றி கண்டிருப்பதாக கலிபோர்னியா மிடில்பரி சர்வதேச கல்வி இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஜெப்ரே லெவிஸ் கூறி உள்ளார்.கண்டனங்கள்

 

வடகொரியாவின் ஏவுகணை ஒன்று, ஜப்பான் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அடைந்தது இதுவே முதல் முறை. இதை ஜப்பான் அரசின் மந்திரிசபை தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா உறுதி செய்தார்.வடகொரியாவின் நீர்மூழ்கி ஏவுகணை தங்கள் நாட்டு கடலில் வந்து விழுந்ததற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே கூறும்போது, ‘‘இது மன்னிக்க முடியாத, பொறுப்பற்ற செயல். ஜப்பானின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவும் தொழில் நுட்பத்தில் வடகொரியா முன்னேற்றம் கண்டிருப்பதாக தோன்றுவதாக தென்கொரியா ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நாட்டின் வெளியுறவுத்துறை, வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா மேலும் பொருளாதார தடைகளை சந்திக்கும், தனிமைப்படுத்தப்படும் என கூறி உள்ளது.அமெரிக்காவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஐ.நா. சபையில் பிரச்சினை எழுப்பப்படும் என அந்த நாடு கூறியது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply