அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால் தலை அக்டோபர் 5–ந்தேதி வெளியீடு
அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அங்கு கொண்டாடப்படும் பிற முக்கியமான பண்டிகைகளின் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே தீபாவளியின் நினைவாகவும் சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என்பது அமெரிக்க இந்தியர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.இந்த நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிட அமெரிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி தங்க நிற பின்னணியில் ஒளிரும் அகல் விளக்கு இருப்பது போல தபால் தலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு தபால் தலை அக்டோபர் 5–ந்தேதி முறைப்படி வெளியிடப்படுகிறது.இது நவம்பர் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அமெரிக்க எம்.பி.யும், இந்த தபால் தலை வெளியிடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவருமான கரோலின் மலோனி தெரிவித்தார். தீப திருவிழாவான தீபாவளியை கவுரவிக்கும் வகையில் வெளியிடப்படும் இந்த சிறப்பு தபால் தலை, பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply